சிறுதுளி பெருவெள்ளம். தமிழ்த்தாய் அந்தாதி இசையாக்க வேலைத்திட்டத்துக்கு உதவுங்கள்.

தவ சஜிதரன் மொழியகம்

தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்

தவ சஜிதரன் மொழியகம்

தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்
  • நுழைவாயில்
    • மொழியகம்
    • ஓசையின் உபாசகன்
    • பயிலரங்கம்
    • தமிழ்த்தாய் அந்தாதி
    • கொடை நல்குனர்கள்
  • திருக்குறள் T-Shirt
  • வலைப்பூ
    • நுழைவாயில்
    • அறிமுகம்
      • மொழியகம்
      • ஓசையின் உபாசகன்
      • பயிலரங்கம்
    • தமிழ்த்தாய் அந்தாதி
      • தமிழ்த்தாய் அந்தாதி
      • கொடை நல்குனர்கள்
    • திருக்குறள் T-Shirt
    • வலைப்பூ
  • Sign In
  • Create Account

  • Bookings
  • Orders
  • My Account
  • Signed in as:

  • filler@godaddy.com


  • Bookings
  • Orders
  • My Account
  • Sign out

Signed in as:

filler@godaddy.com

  • நுழைவாயில்
  • திருக்குறள் T-Shirt
  • வலைப்பூ

Account


  • Bookings
  • Orders
  • My Account
  • Sign out


  • Sign In
  • Bookings
  • Orders
  • My Account

தவ சஜிதரன் (1983 - )

ஒலி ~ மொழி ~ மனம் வழி ஒரு பயணம்

தவ சஜிதரன் -  மொழியக நிறுவுனர். மரபு மற்றும் நவீன கவிதை வடிவங்களை நுட்பத்துடன் கையாளக்கூடிய, தனித்திறன் கொண்ட தமிழ்ப்பாவலர். ஓசையின் உயிர்ப்பும் படிமச் செழுமையும் ஆழமான மெய்யியல் நோக்கும் இவரது கவிதையின் அடையாளங்கள். மகாகவி பாரதி இவரது ஆதர்சம். எட்டாவது வயதில் சந்தக் கவிதை எழுத ஆரம்பித்தவர். 


கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இலங்கை, மத்திய மலை நாட்டின் மாத்தளை நகரை முதன்மை வாழிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தாய்த்தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்திருப்பவர். 


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலக நோக்குடையவர். காருண்யத்தின் வழி மானுட விடுதலைக்கு வழி காட்டும் புத்த பகவனின் தம்மத்தைப் பயின்று ஒழுகும் நாட்டம் கொண்டவர். 2013ம் ஆண்டு தொடக்கம் ஆனபான ஸதி, விபஸ்ஸன தியானங்கள் பயின்று வருகிறார்.


தந்தையார் தவயோகநாதன். தாயார் இந்திராணி. யாழ்ப்பாணம், மாதகலில் மொழிப்புலமையையும் மரபுவழித் தமிழ் மருத்துவத்தையும் தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பேணிவந்தவர்கள் சஜிதரனின் தந்தைவழி மூதாதையர். தமிழகத்தின் வேதாரண்யத்துடன் (திருமறைக்காடு) குருவழித் தொடர்புடையவர்கள். யமக அணியில் புலியூரந்தாதி பாடிச் சிதம்பரத்து நடராஜரைப் புலியூரானாகத் துதித்த - யாழ்ப்பாண வைபவமாலை பாடிய - மாதகல் மயில்வாகனப்புலவர் தவ சஜிதரனின் முன்னோர்களில் ஒருவர். 

ஓசையின் உபாசகன்

ஓசையின் உபாசகன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆளுமையுடன் பேசவும் எழுதவும் கூடியவர் தவ சஜிதரன். சிங்கள மொழியைப் போதுமான அளவு புரிந்து கொள்ளவும் எழுதவும் ஓரளவு பேசவும் இயலும் இவருக்கு. 


ஏ. ஆர் ரஹ்மான், 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி உள்ளடங்கலான உலகப்புகழ் பெற்றவர்களையும் அரசியல், சமூக, இலக்கிய வல்லுனர் பலரையும் நேர்காணல் செய்துள்ள ஊடக ஆளுமை. 

 அலாதியான தொனியுடன் சரளமாகவும் உச்சரிப்பில் பிசிறு இல்லாமலும் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பது தவ சஜிதரனின் மற்றைய சிறப்புத் தேர்ச்சிகளில் ஒன்று. 'யாதும் ஊரே', 'லண்டன் கதைகள்' ஆகிய தொலைக்காட்சி ஆவணத்தொடர்களை எழுதி இயக்கியுள்ளதோடு மட்டுமல்லாது அவற்றின் அளிக்கையாளராகவும் இருந்திருக்கிறார். பல விளம்பரப் படங்களை எழுதியும் இயக்கியும் இருக்கிறார். சொற்சிறப்புக்காகக் கவனம் பெற்ற பல இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார்.


Sunday Observer (கொழும்பு), IBC தமிழ் தொலைக்காட்சி (லண்டன்) முதலானவை இவர் பணிபுரிந்துள்ள ஊடகங்கள். அமெரிக்காவின் முதன்மை ஆங்கில இதழான Wall Street Journalக்கும் பங்களித்திருக்கிறார்.  IBC தமிழின் இலங்கைப் பணிமனை 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் தலைமை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்று எட்டு மாதங்கள் பணியாற்றினார்.  


விரிவான குறிப்புகளை இங்கே படிக்கலாம். 

Copyright © 2021 தவ சஜிதரன் மொழியகம் - All Rights Reserved.

  • திருக்குறள் T-Shirt
  • Privacy Policy
  • Terms and Conditions
  • சிறுதுளி பெருமனம்
  • THIRUKKURAL OFFER
  • யாப்பிலக்கணம் பாடம் 1
  • யாப்பிலக்கணம் பாடம் 3
  • யாப்பிலக்கணம் பாடம் 4
  • யாப்பிலக்கணம் பாடம் 5
  • யாப்பிலக்கணம் பாடம் 6
  • யாப்பிலக்கணம் பாடம் 7

மனம் ~ ஒலி ~ மொழி ~ மொழியகம் ~ மொழியோகம்

image1788

கடவுளின் குறுநகை - புதுயுகப் பாடல்

WATCH IT ON YOUTUBE

WATCH NOW

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept