சிறுதுளி பெருவெள்ளம். தமிழ்த்தாய் அந்தாதி இசையாக்க வேலைத்திட்டத்துக்கு உதவுங்கள்.

தவ சஜிதரன் மொழியகம்

தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்

தவ சஜிதரன் மொழியகம்

தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்தவ சஜிதரன் மொழியகம்
  • நுழைவாயில்
    • மொழியகம்
    • ஓசையின் உபாசகன்
    • பயிலரங்கம்
    • தமிழ்த்தாய் அந்தாதி
    • கொடை நல்குனர்கள்
  • திருக்குறள் T-Shirt
  • வலைப்பூ
    • நுழைவாயில்
    • அறிமுகம்
      • மொழியகம்
      • ஓசையின் உபாசகன்
      • பயிலரங்கம்
    • தமிழ்த்தாய் அந்தாதி
      • தமிழ்த்தாய் அந்தாதி
      • கொடை நல்குனர்கள்
    • திருக்குறள் T-Shirt
    • வலைப்பூ
  • Sign In
  • Create Account

  • Bookings
  • Orders
  • My Account
  • Signed in as:

  • filler@godaddy.com


  • Bookings
  • Orders
  • My Account
  • Sign out

Signed in as:

filler@godaddy.com

  • நுழைவாயில்
  • திருக்குறள் T-Shirt
  • வலைப்பூ

Account


  • Bookings
  • Orders
  • My Account
  • Sign out


  • Sign In
  • Bookings
  • Orders
  • My Account

தமிழ்த்தாய் அந்தாதி

"
தமிழர்கள் மொழியைத் தாயாகவும் கடவுளாகவும் துதிப்பதன் அடிப்படை, மூட நம்பிக்கையோ அல்லது ஆழமற்ற உணர்வெழுச்சியோ அன்று. ஒலிதான் உணர்வாகிறது, மனமாகிறது, உடலாகிறது, உதிரமாகிறது என்பதை ஆழ்ந்து தியானிக்கும்போது தெட்டத் தெளிவாக உணர முடிகிறது. ஒலியில் இருந்து எல்லாம் தோன்றுகின்றன. மொழியைத் துதிப்பது என்பது நமக்குள் இருக்கும் ஆன்மாவைத் துதிப்பது. நினைவு உருப்பெறுவதும் வலுப்பெறுவதும் ஒலி வழியே. மனம், மனதின் செயலான மனனம் இரண்டும் சாத்தியமாவதும் ஒலி கொண்டே.  

"

- பாவலர் தவ சஜிதரன்


தமிழ்த்தாய் அந்தாதி நூலைப் படிக்க


தமிழ்த்தாய் அந்தாதி

அந்தாதிப் பாடல்களை இசைக்காணொளிகளாக உருவாக்கும் பெருந்திட்டம்

  தமிழ்த்தாய் அந்தாதியின் முப்பது பாடல்களையும் பதினைந்து இசைக்காணொளிகளாக உருவாக்கும் பெரும் வேலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் செழுமை உலகம் முழுதும் பரவும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் நீங்களும் பங்கெடுத்து நிதியுதவி நல்க முடியும். 


ஒரு காணொளி உருவாக்கத்துக்கு  £5 முதல்  £500 வரை நீங்கள் பங்களிக்க முடியும். மொழியகத்தின் கொடையாளர் பக்கத்தில் உங்கள் பெயர் இடம்பெறும். பெருந்தொகை உதவுபவர்கள் காணொளியின் தயாரிப்பாளராக அங்கீகரிக்கப் பெறுவர்.  சிறுதுளி பெருவெள்ளம்!
-- 

நிதி நல்க

சந்தமெழும் சொற்கடல்

இசை வடிவம் பெறுகிறது தமிழ்த்தாய் அந்தாதி

அந்தமும் ஆதியும் இல்லா ஓசை

தாய்த்தமிழின் மாட்சியும் ஆட்சியும்

மொழியைத் தாயாக வணங்கும் தமிழர் மரபுக்கு ஏற்ப தமிழின் பெருமைகளைச் சொற்செறிவோடும் பொருட்செறிவோடும் போற்றிப்பாடும் செய்யுட் கோவை தமிழ்த்தாய் அந்தாதி ஆகும். 


முப்பது கட்டளைக் கலித்துறைப் பாக்களாகப் பாவலர் தவ சஜிதரன் தமிழ்த்தாய் அந்தாதியை யாத்துள்ளார். காப்புச் செய்யுள் வெண்பாவில் அமைந்துள்ளது. 

அந்தாதி

அந்தம் என்றால் முடிவு. ஆதி என்றால் தொடக்கம். ஒரு செய்யுளின் முடிவாக வரும் எழுத்து, சீர் அல்லது அடி அதன் அடுத்த செய்யுளுக்கு முதலாக வருமாறு பாடல்கள் அமைவது அந்தாதியாகும். 

கட்டளைக் கலித்துறையின் சிறப்பு

தமிழின் மரபுக் கவிதை வடிவங்களில் கட்டளைக் கலித்துறை தனிச்சிறப்பு வாய்ந்ததும் நுட்பமானதுமாகும். 


ஒவ்வோர் அடியும் மெய்யெழுத்து நீங்கலாக 17 அல்லது 16 எழுத்துகளைக் கொண்டிருத்தல் வேண்டும் (நிரை அசையில் ஆரம்பித்தால் 17, நேர் எனில் 16). வெண்டளை பிசகாதிருத்தல் வேண்டும். கனிச்சீர் வரலாகாது. அடியின் ஈற்றுச்சீர் கருவிளங்காய் அல்லது கூவிளங்காயாக அமைய வேண்டும். 


செய்யுளின் ஈற்றசை ஏகாரத்தில் முடியும். இலகு வழியில் தமிழ்க் கவிதைச் செய்யுள் இலக்கணம் பயில இங்கே சொடுக்குக. தமிழ்த்தாய் அந்தாதி கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளது. 

சொல் - மந்திரம்

செய்யுள் வடிவங்கள் செம்மையையும் அமைதியையும் நோக்கி மனித மனதை ஆற்றுப்படுத்தும் ஓசை யந்திரங்கள். தமிழன்னையை உபாசனைக்குரிய தெய்வமாகக் கொண்டு அந்தாதிப் பாடல்களை மனனம் செய்து பாடிப் பழகுவதன் மூலம் ஒருவர் மனச்செம்மை எய்த முடியும். 

image1786

சந்தமெழும் சொற்கடல்

 07.10.2019 அன்று தமிழ்த்தாய் அந்தாதி எழுதி முடிக்கப்பட்டபோது முகநூலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்:


எனது 36வது பிறந்த நாளான இன்று தமிழ்த்தாய் அந்தாதியை முப்பது பாடல்கள் கொண்ட பனுவலாக எழுதி முடிக்கிறேன்.


'ஓங்கும்' என்று தொடங்கி 'ஓங்கும்' என்றே முடித்திருக்கிறேன்.


அந்தாதியை எழுதத் தொடங்கிய நாள் தொடக்கம் கம்பரின் சரசுவதி அந்தாதி, பட்டரின் அபிராமி அந்தாதி, குமர குருபரரின் சகலகலாவல்லி மாலை, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி, பாரதி கவிதைகள், திருவாசகம் என்று தொடர்ச்சியாக மனம் சந்தமெழும் சொற்கடலில் தோய்ந்து தோய்ந்து துலங்கிக் கொண்டிருந்தது. 


தமிழர்கள் மொழியைத் தாயாக, கடவுளாகத் துதிப்பதன் அடிப்படை மூட நம்பிக்கையோ அல்லது ஆழமற்ற உணர்வெழுச்சியோ அன்று. 

ஒலிதான் உணர்வாகிறது, மனமாகிறது, உடலாகிறது, உதிரமாகிறது என்பதை ஆழ்ந்து தியானிக்கும்போது தெட்டத் தெளிவாக உணர முடிகிறது. ஒலியில் இருந்து எல்லாம் தோன்றுகின்றன. மொழியைத் துதிப்பது என்பது நமக்குள் இருக்கும் ஆன்மாவைத் துதிப்பது. நினைவு உருப்பெறுவதும் வலுப்பெறுவதும் ஒலி வழியே. மனம், மனதின் செயலான மனனம் இரண்டும் சாத்தியமாவதும் ஒலி கொண்டே. குழந்தைகளைச் சிறுவயதில் இருந்து செய்யுள் பாடல்களை மனனம் செய்யப் பழக்குவது அவர்களை ஆளுமை உள்ளவர்களாக்கும். 


அந்தாதி நூலாக வெளிவரும்போது இதுபற்றி விரிவாக எழுத உத்தேசம். 


இந்த அந்தாதிக்குள் இருக்கும் சொற்கள் எங்கிருந்து வந்தன என்பதை எண்ணும்போது திகைப்பாயிருக்கிறது. நான் என்ற ஒற்றை மாயைக்கு இது உரித்தில்லை. 


அந்தாதிக்காகத் தேர்ந்து கொண்ட கட்டளைக் கலித்துறை என்ற செய்யுள் வடிவம் பெயருக்கேற்றாற்போல எழுதுவோனைக் கீழ்ப்பணியுமாறு கட்டளையிடுவது. இந்த நூலிலோ மதம் தணிந்து பாகன் சொற்கேட்டு வாகாக நடைபயிலும் களிறுபோலத்   தமிழன்னையின் அருட்கடாட்சத்தால் வசப்படுவதைக் கற்றோர் உணர்வர். 



முத்தமிழாகும் முதற்றமிழ்

இயற்றமிழாக இருந்த தமிழ்த்தாய் அந்தாதி, இசைத்தமிழாகவும் நாடகத் தமிழாகவும் பரிணாமம் பெறுகிறது - காணொளிப் பாடல்களாக உருப்பெறுகிறது.


சதீஷ் ராம்தாஸ் இசையமைக்கிறார். 


இஃதொரு சிறுதுளி. பல்கிப் பெருகுவது தமிழ்த்தாயின் கருணையிலும் தமிழன்பர்களின் ஆதரவிலும் இருக்கிறது.


இவ்விரண்டு பாடல்களாகத் தொகுத்து இசை வடிவம் கொடுத்துத் தமிழ்த்தாய் அந்தாதியைக் காணொளிப் பாடல்களாக்கும் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தனிமனித வலுவுக்கு அப்பாற்பட்ட பாரிய பணி. தமிழ் மீது காதல் கொண்ட அன்பர்கள் பங்கேற்று உதவுவீராக!

பங்கேற்க

Copyright © 2021 தவ சஜிதரன் மொழியகம் - All Rights Reserved.

  • திருக்குறள் T-Shirt
  • Privacy Policy
  • Terms and Conditions
  • சிறுதுளி பெருமனம்
  • THIRUKKURAL OFFER
  • யாப்பிலக்கணம் பாடம் 1
  • யாப்பிலக்கணம் பாடம் 3
  • யாப்பிலக்கணம் பாடம் 4
  • யாப்பிலக்கணம் பாடம் 5
  • யாப்பிலக்கணம் பாடம் 6
  • யாப்பிலக்கணம் பாடம் 7

மனம் ~ ஒலி ~ மொழி ~ மொழியகம் ~ மொழியோகம்

image1787

கடவுளின் குறுநகை - புதுயுகப் பாடல்

WATCH IT ON YOUTUBE

WATCH NOW

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept